Top Bharathiyar Kavithaigal in Tamil Lyrics. Mahakavi Bharathiyar Kavithai in Tamil Words. List of Bharathiyar Kavithaigal in Tamil Lyrics.
Top Bharathiyar Kavithaigal in Tamil Lyrics. Mahakavi Bharathiyar Kavithai in Tamil Words. List of Bharathiyar Kavithaigal in Tamil Lyrics.
Bharathiyar Kavithaigal in Tamil Lyrics
1. தேடிச்சோறு நித்தம் தின்றுபல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங்கூற்றுக் கிரையானப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
2. அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கொரு காட்டிலோர்
பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும்
மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்!
3. பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்திடினும்
கட்டி இழுத்து கால் கை முறித்து
அங்கம் பிளந்து இழந்து துடித்திடும்
பொங்கு தமிழை பேச மறப்பேனா!
4. அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே
5. காதலடி நீ எனக்கு
காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு
விந்தையடி நான் உனக்கு
போதமுற்ற போதினிலே
பொங்கிவரும் தீஞ்சுவையே
நாதவடிவானவளே
நல்ல உயிரே கண்ணம்மா
6. சாத்திரங்கள் பலபல கற்பாராம்
சவுரியங்கள் பலபல செய்வராம்
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்
மூடக் கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம்
காத்து மானிடர் செய்கை அனைத்தையும்
கடவுள் அர்க்கினிதாகச் சமைப்பராம்
ஏத்தி ஆண் மக்கள் போற்றிட வாழ்வராம்
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!
7. மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமானது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
8. அச்சம் தவிர் - நய்யப் புடை
மானம் போற்று - ரவுத்திரம் பழகு
ஆண்மை தவறேல் தாழ்ந்து நடவேல்
சூரரை போற்று - தீயோர்க்கு அஞ்சேல்
ஓய்தல் ஒழி - நேர்பட பேசு
தாழ்ந்து நடவேல் - சாவதற்கு அஞ்சேல்
காலம் அழியேல் - கீழோர்க்கு அஞ்சேல்
போர் தொழில் பழகு - தோல்வியில் கலங்கேல்
புதியன விரும்பு - வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு - உண்மைக்கு அஞ்சேல்
வெடிப்பற பேசு - நன்று கருது
வவ்வுதல் நீக்கு - தவத்தினை நிரப்பு நீ
கற்றது ஒழுகு - கைத்தொழில் போற்று
சேர்க்கை அழியேல் - பேய்களுக்கு அஞ்சேல்
ஞாயிறு போற்று - மந்திரம் வலிமை
சவுரியம் தகுமே - எல்லாம் மெய் செய்
நாள் எல்லாம் மெய் செய்
9. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ