Sivaji Ganesan Movie Thiruvilayadal Dialogue Lyrics in Tamil. Thiruvilayadal Movie Dharumi, Nakkeeran Dialogue Lyrics in Tamil.
Sivaji Ganesan Movie Thiruvilayadal Dialogue Lyrics in Tamil. Thiruvilayadal Movie Dharumi, Nakkeeran Dialogue Lyrics in Tamil.
Thiruvilayadal Dharumi Dialogue in Tamil
தருமி: பிரிக்க முடியாதது என்னவோ
சிவா: தமிழும் சுவையும்
தருமி: பிரியக்கூடாதது
சிவா: எதுகையும் மோனையும்
தருமி: சேர்ந்தே இருப்பது
சிவா: வறுமையும் புலமையும்
தருமி: சேராதிருப்பது
சிவா: அறிவும் பணமும்
தருமி: சொல்லக் கூடாதது
சிவா: பெண்ணிடம் ரகசியம்
தருமி: சொல்லக் கூடியது
சிவா: உண்மையின் தத்துவம்
தருமி: பார்க்ககக்கூடாதது
சிவா: பசியும் பஞ்சமும்
தருமி: பார்த்து ரசிப்பது
சிவா: கலையும் அழகும்
தருமி: கலையில் சிறந்தது
சிவா: இயல் இசை நாடகம்
தருமி: நாடகம் என்பது
சிவா: நடிப்பும் பாட்டும்
தருமி: பாட்டுக்கு
சிவா: நாரதன்
தருமி: வீணைக்கு
சிவா: வாணி
தருமி: அழகுக்கு
சிவா: முருகன்
தருமி: சொல்லுக்கு
சிவா: அகத்தியன்
தருமி: வில்லுக்கு
சிவா: விஜயன்
தருமி: ஆசைக்கு
சிவா: நீ
தருமி: அறிவுக்கு
சிவா: நான்
Thiruvilayadal Nakkeeran Dialogue Lyrics
சிவா: இப்புலவன் கொண்டு வந்த
பாட்டுக்கு இச்சபையிலே
குற்றம் கூறியவன் எவன்
மன்னன்: அவன் இவன் என்ற
ஏக வசனம் வேண்டாம்
அவை அடக்கத்துடன் கேட்டால்
அதற்கு தக்க பதில் கூறுவார்கள்
சிவா: அப்படியானால் தன்னரை விட
மற்றவர்க்கு இங்கு அதிகாரமும்
மன்னன்: இது அரச சபை அன்று
தமிழ் திருச்சபை இங்கு
சகளர்க்கும் சம உரிமை உண்டு
சிவா: அதனால்தான் தருமி கொண்டு
வந்த பாட்டிலே தவறு கண்டீர்களோ
நக்கீரன்: ஆம் பழுதுள்ள பாட்டாய்
இருந்ததால் பரிசுக்கு
அருகதை இல்லை என்று
தடுத்து கூறியவன் நான் தான்
சிவா: யார் இந்த கிழவன்
மன்னன்: முத்தமிழ் சங்கத்தின்
தலைமை புலவர் நக்கீரன்
சிவா: ஆ கீரனா தமிழ் சங்கத்தின்
தலைவன் என்ற ஆணவத்தில் தான்
பாட்டிலே குறை கண்டீரோ
என்ன குற்றம் கண்டீர்
நக்கீரன்: முதற்கண் பாட்டை
இயற்றியது யார்
சிவா: யாம் யாம் இயற்றினோம்
நக்கீரன்: எழுதிய நீர் வராமல்
இன்னொருவரிடம் கொடுத்து
அனுப்பியதற்கு காரணம்
சிவா: அது நடந்து முடிந்த கதை
தொடங்கி பிரச்சனைக்கு வாரும்
நக்கீரன்: புலவர்க்கு முதலில்
பொய்யுரை தேவை இல்லை
அதை தாம் புரிந்துகொள்ள வேண்டும்
சிவா: புரிந்தது புரியாதது
தெரிந்தது தெரியாதது
பிறந்தது பிறவாதது
அனைத்தும் அறிவோம்
அது பற்றி உமது
அறிவுரை தேவையில்லை
எல்லாம் எனக்கு தெரியும்
நக்கீரன்: எல்லாம் தெரிந்துவிட்டால்
எழுதும் பாட்டிலே பிழை
இருக்காது என்று அர்த்தமா
அது பற்றி யாம் குற்றம் கூறக்கூடாதா
சிவா: ஹாஹா கீரன் எம் பாட்டிலே
குற்றம் கூறுகிறாராம்
கூறும் கூறும் கூறிப்பாரும்
மன்னன்: புலவர்களே சாந்தமாக
உரையாடுங்கள்
புலமைக்கு சர்ச்சை தேவைதான்
ஆனால் அது சண்டையாக
மாறி விடக்கூடாது
சிவா: சண்டையும் சர்ச்சரவும்
புலவர்களின் பரம்பரை சொத்து
அதை மாற்ற யாராலும் இயலாது
பொறுத்து பாரும்
சிவா: நக்கீரரே எமது பாட்டிலே
எங்கு குற்றம் கண்டீர்
சொற்சுவையிலா அல்லது
பொருட்சுவையிலா
நக்கீரன்: சொல்லில் குற்றம் இல்லை
இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம்
பொருளில்தான் குற்றம் இருக்கிறது
சிவா: என்ன குற்றம்
நக்கீரன்: எங்கே நீர் இயற்றிய
செய்யுளை சொல்லும்
சிவா: கொங்குதயர் வாக்கி அஞ்சலை தும்பி
காமம் செப்பாது கண்டதும் மொழிவோம்
பயணியது கெளிய நட்பின்
மயனிய தெளியத்தறிவு கூந்தலின்
அரியமும் உனதோ நீ அறியும் பூவே
இதுதான் எமது செய்யுள்
நக்கீரன்: உமது செய்யுளின் கருத்து
சிவா: தலைவன் தலைவியின்
காதலில் மெய்மறந்து
அவளது கூந்தலில் வரும்
நறுமணத்தை புகழ்ந்து
வண்டை நோக்கி பாடுவதாக
செய்யுள் அமைத்துள்ளேன்
நக்கீரன்: அந்த செய்யுளின் உட்கருத்து
சிவா: மலர்களிடத்தை மகரந்த
பொடிகளை ஆராய்ந்து கொண்டிருக்கும்
தும்பி இனத்தை சேர்ந்த
உயர்ந்த ஜாதி வண்டே
நீ கண்ட மலர்களில்
இந்த மங்கையின் கூந்தலை விட
அதிக மணம் உள்ள
மலரும் உண்டோ என்று
கேட்பதைப்போல் எழுதி இருக்கிறேன்
நக்கீரன்: இப்பாட்டிலிருந்து எமது
மன்னவருக்கு தங்கள் கூறும் முடிவு
சிவா: புரியவில்லை
பெண்களுக்கு இயற்கையிலே
கூந்தலில் மணம் உண்டு
என்பதுதான் எனது தீர்ப்பு
நக்கீரன்: ஒருக்காலும் இருக்க முடியாது
வாசனாதி திரவியங்களை
பூசிக் கொள்வதினாலும்
தொடர்ந்து மலர்களை
சூடிக் கொள்வதினாலும் தான்
ஒரு பெண்ணின் கூந்தலுக்கு
மணம் இருக்க முடியுமே தவிர
பிறப்பிலிருந்து வெறும் கூந்தலுக்கு
இயற்கையில் மணம் உண்டு என்பதை
ஒருக்காலும் ஒத்துக்கொள்ள முடியாது
சிவா: உத்தமா ஜாதி
பெண்களுக்கு கூட இயற்கையில்
கூந்தலில் மணம் கிடையாதோ
நக்கீரன்: கற்புக்கரகிகளாய் விளங்கும்
பெண்களுக்கு கூட செயற்கையில் இன்றி
இயற்கையில் கூந்தலுக்கு மணம்
ஒருக்காலும் இருக்க முடியாது
சிவா: தேவலோக பெண்களுக்கு
நக்கீரன்: ஈரேழு பதினான்கு லோகத்திலுள்ள
பெண்களுக்கும் அப்படித்தான்
சிவா: பாட்களை இயற்ற உமது நாக்கில்
இருந்து உதவுகிறாளே பாரதி
நக்கீரன்: அவளுக்கும் அதே நிலைதானே
நக்கீரன்: கலைமகள் என்ன
நான் அன்றாடம் வழிபாடும்
ஈசனுக்கு இடப்பக்கம் அமர்ந்திருக்கிறாளே
அன்னை மலரவள் உமையவள்
அவளுக்கும் அதே விதிப்படிதான்
சிவா: உண்மையாக
நக்கீரன்: உண்மையாக
சிவா: நிச்சயமாக
நக்கீரன்: நிச்சயமாக
சிவா: உமது தமிழின் மீது ஆணையாக
நக்கீரன்: எனது தமிழ் புலமையின்
மீது ஆணையாக
சிவா: நக்கீரா
நன்றாக என்னைப் பார்
நான் எழுதிய தமிழ் பாட்டு குற்றமா
நக்கீரன்: ஆண்டவா புலவரே
நீரே முக்கண் முதல்வனாயினும் ஆகுக
உமது நெற்றில் ஒரு கண் காட்டிய போதிலும்
உமது உடம்பெல்லாம் கண்ணாக்கி
சுட்ட போதிலும் குற்றம் குற்றமே
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே
சிவா: அங்கம் புழுதிபட
அரிவாளில் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால் பரப்பி
சங்கதனைக் கீர்கீர் என அறுக்கும்
நக்கீரனோ எம்கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்
நக்கீரன்: சங்கறுப்பது எங்கள் குலம்
சங்கரனார்க்கு ஏது குலம்
சங்கை அரிந்துண்டு வாழ்வோம்
அரனே உம் போல்
இரந்துண்டு வாழ்வதில்லை
சிவா: நக்கீரா