Raavanan Movie Dialogue Lyrics in Tamil. Raavanan Movie Best Tamil Punch Dialogue Lyrics. Ravanan Love, Climax, Aishwaraya Rai Dialogues.
Raavanan Movie Dialogue Lyrics in Tamil. Raavanan Movie Best Tamil Punch Dialogue Lyrics. Ravanan Love, Climax, Aishwarya Rai Dialogues.
Raavanan Mass Dialogue Lyrics
சத்தம் புடிக்கலேன்னு சொன்னீல
ஏற்கனவே தலைக்குள்ள பத்து குரல் கேட்குது
வீரா அந்த பொம்பளைய கொன்னுடு
பட்டுனு போட்டுரு டப்பு டப்புனு சுட்டுரு
தலைக்குள்ளா அலறல்
டன்டன்டன் டன்டனக்கர
காட்டுக் கூச்சல்
டன்டன்டன் டமால்டக்கர
ருத்திர தாண்டவம்
டன்டனக்கர டன்டனக்கர
ஒரு பக்கம் கேள்வி
இன்னொரு பக்கம் பதில்
இங்க தத்துவம் கோவம்
பலி சிரிப்பு நிதானம்
அது இதுன்னு எல்லாம்
பொம்பளைங்க கேட்ட வார்த்தை
பேசுனாக்கூட பொருத்துக்கலாம்
அழுதா சகிக்க முடியாதுல
Ravanan Sister Dialogue Lyrics
இதென்ன Watch-ஆ
நான் வாங்கி கொடுத்ததா
என் தங்கச்சிதான் கொடுத்தேன்
அவளை எங்க அவளை எங்கடே
தொலைச்சிடையோ
Watch-அ வச்சுருக்க
என் தங்கச்சிய தொலைச்சுட்ட
Watch-அ பத்திரமா வச்சுருக்க
என் தங்கச்சிய எங்கடே
Raavanan Movie Love Dialogue
இப்படி நான் கேட்கக் கூடாது தான்
அப்போ அந்த SP
உங்கள சந்திச்சிருக்க கூடாது
கல்யாணம் பண்ணிருக்க கூடாது
எங்க ஊருக்கு வந்திருக்க கூடாது
செய்யகூடாதது எல்லாம்
செஞ்சிருக்க கூடாது
கோவத்துல நான் உங்களை
இழுத்துட்டு வந்திருக்க கூடாது
உங்களை சுட்டு தள்ளனும்னு
நினைச்சிருக்க கூடாது
நீங்க தைரியமா மலை உச்சில
இருந்து குதிச்சிருக்க கூடாது
பதறி அடிச்சு நான் பின்னால
வந்துருக்க கூடாது
நீங்க கண்ணை தொறந்து உடனே
என் உசுரு என்கிட்ட
திரும்ப வந்திருக்க கூடாது
எல்லாம் நடந்து போச்சு
எழவு எதையும் மாத்த முடியாது
என்னால மனசுல தோனுற
கருமத்தையும் இப்ப மாத்த முடியாது
நான் பட்டுனு கேட்டதையும்
மாத்த முடியாது
Ravanan Climax Tamil Dialogue
சிங்கம் அண்ணே நாசங்கற
சாவுங்கற பயப்படனுமோ
ஏய் அழகு பயமா இருக்காள
எனக்கு நடுங்குதுல
உறங்கிக்கிட்டு இருக்குற
நாய் மேல கல்லு கல்லா எறிஞ்சா
கடிக்கத்தான் செய்யும்
இதா உசரமா மரம் நிக்குல
ஒரு கிளையை ஒடைச்சு
பாருங்க சடால்னு வளரும்
என்ன புதுசாவா மெரட்டுறானுங்க
காலகாலமா இதே எழவேதானே
பண்ணிகிட்டு இருக்கானுங்க
கைய ஓங்குனானுங்க
நாமளும் கைய ஓங்குனோம்
கம்ப எடுத்தானுங்க
நாமளும் கம்ப எடுத்தோம்
இன்னைக்கு காட்டு முட்டாள்
பையனுங்க துப்பாக்கி நீட்டுறாங்க
தலைய கிள்ளிருவோம்
Raavanan Love Feeling Dialogue
என்னை கொல்ல பிறந்த
ஆசாமி யாருடேனு இவ்வளோ
வருசமால தேடிக்கிட்டு இருந்தேன்
சுட்டுங்க இங்கன சுட்டா
பத்தே நிமிஷம்தான்
மனசுல இருக்குற கண்ட்ராவி
சஞ்சலம் வேதனை கூடவே
உசுரும் போயிடும்
ஆனா இங்க சுட்டா ஒரே நொடி
நினைப்பு பிரியம் ஆசை மூச்சு
எல்லாம் ஒண்ணா போயிடும்
வலிக்காது உங்களை அப்படியே
சந்தோசமா பாத்துகிட்டே
சிரிச்சுகிட்டே சறிஞ்சுருவேன்
வெறும் 14 நாள்தான் உங்களை
பயமுடுத்தி கூட வச்சு இருந்தோமா
14 நாளா 14 நாள் இவ்வளோ பெருசா
கண்ணை கட்டி போங்கன்னு
அனுப்புனப்ப கூட
இவ்வளோ வறுத்தப்படலையே
திரும்பி வந்த உடனே மட்டும்
ஏன் இம்புட்டு சந்தோசமா இருக்கு
Ravanan Romantic Love Dialogue
கடவுள்னா கடவுளேவா
அவதார புருஷனா
அப்பழுக்கு இல்லாதவரா
எங்க பத்து தலை சேர்ந்தாலும்
அவுகளுக்கு ஈடாகாதோ
பாக்கா எப்படி இருப்பாங்க
செக்க செவேலுன்னு
நல்லாதான் இருப்பாங்க கடவுள்ள
வேற எப்படி இருக்க முடியும்
நான் அவுகள பாக்கனுமே
ஒரு மட்டும் எப்பாடு பட்டாவது
கடவுள் எப்படித்தான்
இருக்காருன்னு பாக்கனும்
ஏய்யா இப்படி முந்திடேரே
பொட்டுனு கேட்டிரனும்
பாசமா இருப்பாரா
சிரிக்க சிரிக்க வச்சுக்குவாரோ
உங்களுக்கு இஷ்டமா
பொறாமையா இருக்கு சாமி
அப்படியே அடி வயிறு எல்லாம் எரியுது
உங்க கடவுள் எப்பாவது
பொறாமை பட்டுருக்காரா
வீரைய்யாவுக்கு தான் பொறாமை
நான் மிருகம் காட்டான்
கிராமத்தான் ஒடுக்கப்பட்டவன்
நான் எங்க நீங்க எங்க
உங்க கடவுள் எங்கேன்னு நினைச்சேன்
ஆனா இப்ப இந்த பொறாமை
எனக்கு உள்ள புகுந்து
உங்க எல்லாரையும் விட
என்னை உசரமா ஆக்கிடுச்சு
Ravanan Movie Aishwarya Rai Dialogue
தைரியம் கொடு என் கோவத்தை
என்கிட்ட இருந்து எடுக்காத
அது மட்டும்தான் என்னை காப்பாத்துது
அவுங்கள என்கிட்ட பிரியமா இருக்க விடாத
கெட்டவங்களை கெட்டவங்களா காட்டு
உண்மையா காட்டாத