Samuthirakani Motivational Dialogue Lyrics in Tamil. Samuthirakani Tamil Dialogue Lyrics from Thondan, Appa, Rajini Murugan Movie.
Samuthirakani Motivational Dialogue Lyrics in Tamil. Samuthirakani Tamil Dialogue Lyrics from Thondan, Appa, Rajini Murugan Movie.
Samuthirakani Motivational Dialogue Lyrics
எதுக்கும் பயப்படாத
பயம் எதையும் வென்று எடுக்காது
அது வெறும் வெறுப்பை
மட்டும்தான் சம்பாரிக்கும்
இங்க இருக்குற எல்லாருக்கும்
ஒரு வாழ்க்கை இருக்கு
எவனும் எதுக்காகவும் வரமாட்டான்
நம்மள நாமதான் காப்பாத்திக்கனும்
வாழ்க்கைல ஒரு தடவை ஏமாறலாம்
அதையே பழகிக்காத
இந்த உலகத்துல ரெண்டே
ரெண்டு பேர் மட்டும்தான் வாழ முடியும்
ஒன்னு ஏமாத்துறவன்
இன்னொன்னு ஏமாந்தே பழகி போனவன்
என்னால ஏமாத்தவும் முடியாது
ஏமாறவும் முடியாது
கிடைக்கிற வாய்ப்பை
சரியா பயன்படுத்திக்கிட்டா
உன் வாழ்க்கைக்கு நீ முதலாளி
Miss பண்ணிட்ட
இன்னொருத்தனோட வாழ்க்கைக்கு
கடைசி வரைக்கும் நீ தொழிலாளி
Samuthirakani Inspiration Dialogue Lyrics
இந்த உலகத்துல உன்னால முடியும்
நீ நல்லா வருவ நீ பெருசா சாதிக்கப்போற
தைரியமா இர அப்படிங்கிற
நம்பிக்கையான வார்த்தைகள்
சொல்றதுக்குத்தான் நெறைய பேர் இல்லை
துவண்டுபோய் இருக்குற உங்கக்கிட்ட
அந்த மாதிரி வார்த்தைகள சொல்லி பாருங்க
வெடிச்சு சிதறி எழுந்து
பல சாதனைகள் செய்வாங்க
நம்பிக்கையான வார்த்தைகள்தான்
பல புது புது விஷயங்கள்
உருவாக காரணமா இருக்கு
சொந்தக்காரங்களாம் சும்மாய்யா
பக்கத்துல இருக்கறவன்
கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்கனும்
இவனுங்க Advice பண்ணிகிட்டே
இருக்கனும்னு நினைப்பானுங்க
அவனுங்க என்னய்யா நம்மள ஒதுக்குறது
நம்ம அவிங்கள ஒதுக்குவோம்
பெரிய பெரிய படிப்பாளிங்க
எல்லாம் படிச்சது இவ்வளோதான்யா
பிடிக்காதது எவ்வளவோ இருக்கு
வாழ்க்கைக்கு படிப்பு அவசியம்தான்
ஆனா படிப்பே வாழ்க்கை இல்லை
ஒருத்தங்க கஷ்டத்துல இருக்கும் போது
அவுங்களுக்கு காசு பணம் கொடுத்து
உதவுறது மட்டும் உதவி இல்லை
இந்த மாதிரி நான் உனக்காக இருக்கேன்னு
போய் உக்கார்ந்துட்டு வரதும் உதவிதான்
ஊர்க்காரன் என்ன வேணாலும் சொல்லட்டும்
எவன பத்தியும் எனக்கு கவலை இல்லை
ஒவ்வொருத்தன் வீட்டு கதவை தட்டி
நான் அப்படி இல்லை இல்லைனு சொல்லிட்டு
இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை
என் வீட்டுக்குள்ள இருக்குற நீங்க
என்னைப்பத்தி நல்ல விதமா நினைச்சா போதும்
எல்லாம் தெரிஞ்சவன்னு
இந்த உலகத்துல யாருமே கிடையாது
மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளுக்கே
எல்லா திறமையும் கிடையாது
ஆக்குறதுக்கு ஒருத்தன்
அழிக்குறதுக்கு ஒருத்தன்
காக்குறதுக்கு ஒருத்தன்
போதிக்கிறதுக்கு ஒருத்தன்
வரம் கொடுக்குறதுக்கு ஒருத்தன்
ரட்சிக்கிறதுக்கு ஒருத்தன்னு
தனி தனி திறமையோட தான்
படைச்சிருக்கான்
என்னை பொறுத்த வரைக்கும்
திறமைன்றது வெற்றிக்காக
போராடுறது மட்டும்தான்
Samuthirakani Che Guevara Dialogue Lyrics
போருக்கு போகும் போது
கைல ஆயுதங்களோட
போகனும்னு அவசியம் இல்லை
நீ சுத்தமான வீரனா இருந்தா
உனக்கான ஆயுதங்கள
நீ இருக்க கூடிய களத்துலயே
தயார் செய்திக்க முடியும்
Samuthirakani Dialogue Lyrics About Tree
வெள்ளைக்காரன் சந்தன மரத்தை
வெட்டக் கூடாதுனு சொன்னான்
ஏன் அவன் தேவைக்கி நாம்ம அதை
அனுபவிச்சிட்டு கூடாதுன்றதுக்கு தான்
ஆனா இன்னைக்கி
மனிதனோட உயிர் நாடியான
கல்வியும் மருத்துவத்தையும்
தனியார்க்கிட்ட கொடுத்துட்டு வெறும்
சந்தன மரத்தையும் சாராயத்தையும்
வச்சு நாக்க வழிக்க போறீங்க
வீட்டு வாசலே இருக்குற
புங்க மரத்தையும் வேப்பை மரத்தையும்
வெட்டி எறிஞ்சுட்டு கேவலம் அழகுக்காக
ரோஜா செடி வளக்குற சமூகம்தான் இது
ஒரு செடியை புடிங்கி எரியுறதும்
கருவூல இருக்குற குழந்தைய
கசக்கி கொல்லுறதும் ஒன்னுன்னு
தமிழ் இலக்கியம் சொல்லுது
Samuthirakani Dialogue Lyrics About Female
பெண்ணுறது எதிர் பாலினம்
நமக்கு அடிச்ச வலிக்கிற மாதிரி
அவுங்களுக்கும் அடிச்ச வலிக்கும்
மனசுல அழுக்கு சேர விடக்கூடாது
அழுக்கு அதிகமாச்சுனா மிருகமாகிடுவா
கத்தி எடுத்து குத்த சொல்லும்
Acid எடுத்து அடிக்க சொல்லும்
5 நிமிஷம் தனியா உக்காந்து பேசுனேனு
வச்சுக்கோயேன் Full-அ சுத்தம் ஆகிடும்