Aruvi Movie Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics

Aruvi Movie Dialogue Lyrics in Tamil

Aruvi Movie Dialogue Lyrics in Tamil. Aruvi Movie Mass Life Lesson Punch Dialogue Lyrics in Tamil. Aruvi Movie Interval Dialogue.

வாழ்க்கைல எது Madam சந்தோசம்
நீங்க எல்லாம் சந்தோசமாவா இருக்கீங்க
இந்த சமூகம் சொல்லி கொடுக்குற மாதிரி
வாழ்ந்த சந்தோசமா வாழ முடியுமா
அப்படி என்ன சொல்லி கொடுக்குது
இந்த சமூகம்..!!!

பொய் சொல்லாத
தப்பு பண்ணாத
எதுத்து கேள்வி கேட்காத
எல்லா பாரத்தையும்
கடவுள் மேல எறக்கி வை
இதெல்லாத்தையும் Follow பண்ணுனா
நாம்ம சந்தோசமா வாழ முடியுமா

இந்த சமூகத்துல சந்தோசமா வாழனும்னா
இந்த Rules மட்டும் Follow பண்ணுனா போதாது
அதைவிட முக்கியமான ஒரு பொறுப்பு இருக்கு

ஒரு குடும்பம்
ரெண்டு குழந்தைங்க
ஒரு அளவான குடும்பம்
மாச சம்பளத்துக்கு ஒரு வேலை
மூனு வேளை சாப்பாடு

ஒரு வீடு சொந்த வீடு
ஒரு சாதாரண TV
அது வாங்கியாச்சுனா ஒரு LCD
அதுவும் வாங்கியாச்சுனா ஒரு LED
அதுவும் வாங்கியாச்சுனா
பத்தாது ஒரு Home Theatre

முடிஞ்சா ஒரு Car
முடிஞ்சா அதைவிட பெரிய Car
அது வந்துருச்சு வீட்டுல மூனு கார் இருக்குனு
ஒரு BMW இல்லேன்னா Audi

பசங்களுக்கு ஒரு School
கண்டிப்பா Government School-ல சேர்க்கக்கூடாது
ஒரு Private School English Medium School
Dav-வோ Dan Bosco-வோ
No I Put My Kids Only in Bilobom-னு
நீங்க கூட சொன்னிங்க Madam Phone-ல

ஒரு வாரத்துல ஒரு நாள் Beach
இல்லேன்னா Restaurant
இல்லேன்னா Shopping Mall
இல்லேன்னா ஒரு படத்துக்கு
கூட்டிட்டு போனும் நல்ல Theatre-ல

அங்கப்போன 120 ரூபாய்
என்ன மயிருக்கு படம் எடுக்குறாங்க
ஒரு குடும்பம் 1000 ரூபாய் செலவு பண்ணி
ஒரு படம் பார்க்கப்போன
அந்த படத்துல எதாவது இருக்கனும்ல
ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது

ஆனா நீ அந்த படத்தை பாத்துதான் ஆகனும்
ஏன்னா அதான் விதி
இதை தவிர்த்து தேவைப்படும் போது எல்லாம்
Dress Shoes செருப்பு துணிமணி
நீ எவ்வளோ வேணுலாம் வாங்கலாம்
வாங்கலாம்லா கெடையாது
வாங்கித்தான் ஆகனும்

நீ என்ன வாங்கனும்னு உக்காந்து
யோசனை பண்ண தேவை இல்லை
உன்னை சுத்தி நீ நின்னாலோ நடந்தாலோ
Bus-கு Wait பண்ணுனாலோ எங்க திரும்பினாலோ

TV Radio Newspaper Internet Mobile Road
Road முழுக்க கடை கடை முழுக்க Advertisement
Advertisement முழுக்க Discount Offer Sale Sale Sale
முந்துங்கள் முந்துங்கள் முந்துங்கள்
ஆடி Offer-ல ஆடி போவீங்க ஆடி

இங்க ஒரே Rule-தான் பணம்
இந்த சமூகம் என்ன சொல்லுது
நீ பணக்காரனா இருந்த உன்னை மதிப்பேன்
இல்லேன்னா உன்னை மதிக்க மாட்டேன் Simple

நீ எங்க வேணாலும் வேலை செய்
எவனை வேணும்னாலும் சொரண்டி தின்னு
காக்க புடி அடிமையா இரு
ஊழல் பண்ணு லஞ்சம் வாங்கு
குத்து அடி மெரட்டு கொலை பண்ணு Rape பண்ணு
எத்தனை பேர் வயித்துல வேணா மிதி
எவ்வளோ பேர வேணாலும் முட்டாள் ஆக்கு

பல்லாயிரக்கணக்கான
லட்சக்கணக்கான கோடிக்கணக்கான
பணத்தை வேணும்னாலும் கொள்ளையடி
யாரும் உன்ன தூக்கிபோட்டு மிதிக்க மாட்டாங்க

ஏன்னா இந்த சமூகத்துல ஒரே ஒரு விதிதான்
நீ பணம் சம்பாதிச்சேன்னா
இந்த சமூகம் உன்னை மதிக்கும்
நீ பணம் சம்பாதிக்கலேனா
இந்த சமூகம் உன்னை மதிக்காது Simple

உனக்கு ஒரு சொந்த வீடு இல்லேன்னா
உன் பொண்டாட்டி கூட பிரச்சனை வரும்
உன் சொந்தக்காரங்க யாரும்
உன்னை மதிக்க மாட்டாங்க
அப்பா அம்மா தம்பி தங்கச்சி
யாரும் உன்னை மதிக்க மாட்டாங்க

உன் பொண்ணுக்கு
பையன கொடுக்க மாட்டாங்க
உன் பையனுக்கு
பொண்ண கொடுக்க மாட்டாங்க

நான் எங்க போயி சம்பாதிக்கிறது
நான் யாருக்காக பணம் சம்பாதிக்கனும்
18 Dress சொந்த வீடு Mineral Water
4 லட்ச ரூபாய் Car 120 ரூபாய்க்கு
ஒரு குப்பை படம் எனக்கு தேவை கிடையாது

அப்போ இதெல்லாம் யாரோட தேவை
எங்கையோ இருக்குற 4 முதலாளி
அவனை நக்கி தின்கிற
இங்க இருக்குற 400 முதலாளி
உலகத்துல இருக்குற அத்தனை
பணக்கார பன்னிகளும் கொழுத்து
போறதுக்கு தேவை ஒரு பெரிய Market
அந்த Market-தான் இந்தியா

இங்க நம்ம TV-ல 100 தடவை
விளம்பரம் போட்டான்னா
நீ அவன் Soap-அ வாங்கித்தான் ஆகனும்
வேற வழியே கிடையாது

தினம் தினம் உழைச்சு உழைச்சு
ஆசைப்பட்டு ஆசைப்பட்டு
தேவையில்லாத குப்பையெல்லாம் வாங்கி
எதுக்கு வாங்கினோங்கிறதே மறந்து போயி
அடுத்த நாள் காலைல மறுபடியும் எழுந்திருச்சு
உழைச்சு கொட்டணும்

அப்பத்தான் உலகத்துல இருக்குற
அத்தனை பணக்காரங்களும்
சந்தோசமா இருப்பாங்க
அவுங்க சந்தோசமா வச்சுருக்கத்தான்
கடவுள் உங்களை படைச்சுருக்காரு

இதெல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு
இந்த சமூகம் சொல்லி கொடுக்குற மாதிரி
உன் தேவை எல்லாத்தையும் பூர்த்தி
பண்ணிக்கிட்டே செத்துப்போனதான்
இது ஒரு குடும்பம்

அப்பத்தான் இந்த சமூகம்
இந்த குடும்பத்தை ஏத்துக்கும்
அப்பத்தான் உன்ன இந்த சமூகம் ஏத்துக்கும்
இது எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டாதான்
இந்த சமூகத்துல என்ன சொல்றது
சந்தோசமா வாழ முடியும்
இப்படி ஒரு குப்பை வாழ்க்கை வாழ்றதுக்கு
AIDS வந்து செத்து போகலாம்னு சொல்றேன்

Post a Comment

0 Comments