Bahubali 2 Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics

Bahubali 2 Dialogue Lyrics in Tamil

Bahubali 2 Tamil Dialogues Lyrics. Baahubali 2 Movie Dialogue Lyrics in Tamil Font. Bahubali 2 Mama, Kattappa, Mass Dialogue Lyrics.

Bahubali 2 Mass Tamil Dialogue Lyrics

காலம் ஒவ்வொரு கோழைக்கும்
வீரனாக ஒரு கனம் கொடுக்கும்
அந்த கனம் இது

தேவசேனை மீது கை வைப்பதும்
பாகுபலியின் வாளின் மீது
கை வைப்பதும் ஒன்றுதான்

நீ செய்தது தவறு
பெண்களின் மேல் கைவைத்தால்
வெட்ட வேண்டியது விரல்களை அல்ல
தலையை...

தப்பு செய்த காரணத்தால்
சேதுபதி படபடத்தான்
உண்மை பேசிய காரணத்தால்
தேவசேனை அச்சமின்றி நின்றாள்
குற்றம் நிரூபிக்கப்பட்டது
தலை துண்டிக்கப்பட்டது

Bahubali 2 Kattapa Mama Tamil Dialogue Lyrics

நீர் என் பக்கம் இருக்கும் வரை
என்னை கொல்லும் ஆண் மகன்
இன்னும் பிறக்கவில்லை மாமா

கட்டிய மனைவியை
கொல்ல நினைக்கும் மூளையை
ஊன மூளை என்றுதானே
சொல்ல வேண்டும்

நான் நாய் அல்லவா
மோப்பம் பிடித்தேன்

மகிழ்மதி சாம்ராஜ்யத்தின் முடி இளவரசன்
ராஜமாதா சிவகாமி தேவியின் புத்திரன்
பிரபஞ்சத்தில் யாரும் வென்றிடா
காலகேயரை வதம் செய்த வீராதி வீரன்
அமரேந்திர பாகுபலி

Bahubali 2 Amarendra Baahubali Tamil Dialogues

நாவிரல் பிடித்ததும் மறுமுகம்

மூட்ச்சை படைப்பவன் தேவன்
மூட்ச்சை நீட்டிப்பவன் வைத்தியன்
மூட்ச்சை காப்பவனே சத்ரியன்

நிறைமாத கர்ப்பிணியின்
கைகளில் விளங்கு பூட்டி
விசாரணை நடத்தும் இந்த சபை
எப்போழுதோ எல்லை மீறிவிட்டது அம்மா

Baahubali 2 Interval Tamil Dailogue Lyrics

அமரேந்திர பாகுபலி ஆகிய நான்
மகிழ்மதி மக்களின் உடல் பொருள்
மானம் உயிர் காப்பேன் என்று
மகாராஜா பல்வால்தேவரின்
படைத் தலைவனாக பதவி ஏற்று
அச்சம் இன்றி பாகுபாடு இன்றி
அரசை நிலைநாட்ட உயிர் தியாகம்
செய்யவும் தயங்க மாட்டேன் என்று
ராஜமாதா சிவகாமி தேவியின் சாட்சியாக
இன்று பிரமாணம் செய்கிறேன்  

Baahubali 2 Villain Tamil Dialogue Lyrics

மகிழ்மதி எனக்கு நினைவு தெரிந்த
நாளில் இருந்து உனக்காக ஏங்கினேன்
கனவில் உன்னை
என் தலையில் சுமந்து தூங்கினேன்
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு
இத்தனை போராட்டங்களுக்கு பிறகு
நீ என் கையில் கிடைத்தும்
ஏன் என்னால் உன்னை உணர முடியவில்லை
உன்னை நான்
என் தலையில் வைக்கும் பொழுது
நீ ஏன் அந்த கீழ் மகனை
உன் தலையில் வைக்கிறாய்

நீ என்னை கொல்ல
முயற்றதாக நம்ப வைத்து
அவள் கைகளால் உன் மரண
சாசனத்தை எழுத வைத்தேனடா

Bahubali 2 Sivagami Devi Tamil Dialogue Lyrics

அழகே பொறாமைப்படும் பேரழகி

பாகுபலியின் பெருமையை புரிந்து கொண்ட நீ 
அந்த வானளவு உயர்ந்துவிட்டாயாய்
பாலூட்டி வளர்த்த மகனை கொன்ற நான்
உன் காலடியில் விழுந்து விட்டேன்

அமரேந்திர பாகுபலி இறந்துவிட்டான்
இப்பொழுது உங்கள் புதிய மன்னன்
மகேந்திர பாகுபலி...

Baahubali 2 Deva Senai Tamil Dialogue Lyrics

இது களம் கண்டு வாள் வீசிய கை
ஒரு வீரனின் கை எனக்கு தெரியாதா

என் மனதை வென்றெடுத்த மாவீரர் நீர்
உம் பணிப்பெண்ணாக வரச்சொன்னால்
மரணம் வரை நான் ஆனந்தமாய் வருவேன்
ஆனால் என் மானம் இழந்து கைதியாக
ஒரு அடி எடுத்து வைக்க மாட்டேன்

ஒரு வஞ்சகனின் தீஞ்செயலைவிட
ஒரு நல்லவனின் மவுனம்
நாட்டிற்கு மிகவும் கொடியது 

உங்கள் சாசனங்களை நெருப்பில் எரியுங்கள்
உங்கள் சட்டங்களை கடலில் எறியுங்கள்
மதி கெட்ட இந்த அரசுக்கு
மகிழ்மதி என்று பெயர் வேறு

வானை முட்டும் கோட்டைகளில்
மலையென நிற்கும் சிற்பங்களில்
அளப்பது புகழ் அல்ல
பரந்து விரிந்த மனங்களில்
அளப்பதே புகழ்
இங்கே அப்படி மனங்களும் இல்லை
புகழும் இல்லை... வெட்கம்

Post a Comment

0 Comments